<<= Back Next =>>
You Are On Question Answer Bank SET 256

12801. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

Answer: சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது

12802. வலவன் ஏவா வானவூர்தி - இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்

Answer: புறநானூறு

12803. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக

Answer: கனிமொழி கட்டுரை எழுதினாள்

12804. கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer: காண்

12805. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer: அளபெடை

12806. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

Answer: கனிஷ்கர்

12807. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer: முருகன் கீழே உருண்டான்

12808. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை

Answer: ஆரியபட்டர்

12809. இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது

Answer: மும்பை மற்றும் கோயம்புத்தூர்

12810. பிரித்து எழுதுக : தொல்லுலகம்

Answer: தொன்மை + உலகம்

12811. ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?

Answer: 60°

12812. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?

Answer: கேரளா

12813. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு

Answer: 1977

12814. பிரித்து எழுதுக : ஈராயிரம்

Answer: இரண்டு + ஆயிரம்

12815. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை

Answer: துங்கபத்ரா

12816. இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்

Answer: சிறப்பு திருமணச்சட்டம்

12817. கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது

Answer: குழிலென்சு

12818. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது

Answer: விளையாட்டு பயிற்சியாளருக்கு

12819. குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை

Answer: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்

12820. உலகின் சர்க்கரைக் கிண்ணம்

Answer: கியூபா

12821. மாமழை - இலக்கணம் அறிக .

Answer: உரிச் சொற்றொடர்

12822. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை

Answer: குன்று - மாரி

12823. "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:

Answer: நாக்கு

12824. பெயர்ச் சொல்லின் வகை அறிக: "வட்டம்"

Answer: குணப்பெயர்

12825. AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன?

Answer: 6 செ.மீ.

12826. வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்

Answer: முதலாம் நரசிம்மவர்மன்

12827. அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

12828. இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

Answer: ஏமாற்றம்

12829. பிரித்து எழுதுக - நன்னாள்

Answer: நன்மை + நாள்

12830. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?

Answer: சாரநாத்

12831. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை

Answer: மெலிதல் - நூல்

12832. உலர் பனிக்கட்டி எனப்படுவது

Answer: திட கார்பன் டை ஆக்ஸைடு

12833. பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:

Answer: கலம்பகம்

12834. அஞ்சு - இதிலுள்ள்ள போலி

Answer: முற்றுப்போலி

12835. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

Answer: இமய மலைத்தொடர்கள்

12836. வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்

Answer: கருப்பு

12837. பேரொளி - இலக்கண குறிப்பு வரைக:

Answer: பண்புத் தொகை

12838. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு - உளவு

Answer: நடமாடு - வேவு

12839. அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்

Answer: முதுமொழிக்காஞ்சி

12840. பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

Answer: புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்

12841. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது

Answer: குளுக்காஹான்

12842. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

Answer: விஜயாலய சோழன்

12843. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

Answer: மயில்

12844. கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?

Answer: விழித்திரை

12845. சொற் பொருளறிந்து பொருத்துக.

Answer: அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்

12846. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?

Answer: விதி-360

12847. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்

Answer: காங்கா தேவி

12848. புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக

Answer: புத்தெழுச்சி

12849. எதிர்ச்சொல் தருக : ஓடா

Answer: ஓடும்
<<= Back Next =>>
Terms And Service:We do not guarantee the accuracy of available data ..We Provide Information On Public Data.. Please consult an expert before using this data for commercial or personal use
DMCA.com Protection Status Powered By:Omega Web Solutions
© 2002-2017 Omega Education PVT LTD...Privacy | Terms And Conditions